பெங்களூரு: துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் கைதான கன்னட நடிகை ரன்யா ராவ், இதற்கு முன்பு 45 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. துபாய்க்கு மட்டும் அவர் குறுகிய காலத்தில் 27 முறை சென்று வந்துள்ளார்.
ரன்யாவிடம் இருந்து 14.8 கிலோ மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் கர்நாடக மாநில காவல்துறை உயரதிகாரி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளாவார்.
துபாயில் இருந்து பெங்களூரு திரும்பியபோது, அளவுக்கு அதிகமாக இவர் அணிந்து வந்த நகைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர் இவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது, தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரிகள் கடத்தல் தங்கத்துடன் பிடிபட்ட ரன்யாவின் கடப்பிதழைப் பார்வையிட்டபோது அவர் 45 நாடுகளுக்குச் சென்று வந்திருப்பது உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அவர் எதற்காக இந்தப் பயணங்களை மேற்கொண்டார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
அவருக்கு அனைத்துலக தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அவருக்கு யாரேனும் முக்கியப் புள்ளிகள் உதவுகின்றனரா அல்லது ரன்யா தனியாகச் செயல்பட்டாரா என்றும் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.