தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதன்முறையாக அரசாங்க சமூக சுகாதாரப் பராமரிப்பு சேவகர்களுக்கு நன்றித் தொகை

1 mins read
418996ad-0585-4b20-bb9b-1ebf25320d4f
‘ஆ‌ஷா’ சேவகர்களுக்கு நன்றித் தொகை வழங்கும் முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம். - படம்: எம்எஸ்என் / இணையம்

விஜயவாடா: இந்தியாவில் ஆ‌ஷா எனப்படும் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள சமூக சுகாதாரப் பராமரிப்பு சேவகர்களுக்கு (community health workers) நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றித் தொகை (gratuity) வழங்கும் முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் விளங்குகிறது.

இது, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

இந்தியாவில் ஆந்திராவில்தான் ஆ‌ஷா சேவகர்களுக்கு ஆக அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அம்மாநிலத்தில் இச்சேவகர்கள் ஒவ்வொருவருக்கும் மாதச் சம்பளமாக 10,000 ரூபாய் (153.84 வெள்ளி) வழங்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் இத்தொகை ரூ. 750 மட்டுமே. மேற்கு வங்கத்திலும் டெல்லியிலும் ரூ. 3,000, கேரளத்தில் ரூ. 5,000, தெலுங்கானாவில் ரூ. 7,500.

ஆந்திராவில் 30 ஆண்டுகாலத்துக்குப் பணியில் இருக்கும் ஆ‌ஷா சேவகர்களுக்கு ரூ. 150,000 வரை நன்றித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, சேவகர்களின் 180 மகப்பேற்று விடுப்பு நாள்கள், வேலை நாள்களாகக் கணக்கில் கொள்ளப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்தக் காலகட்டத்தில் மகப்பேற்று விடுப்பு எடுக்கும் ஆ‌ஷா சேவகர்கள் 60,000 ரூபாய் சம்பளம் பெறுவர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் சேவகர்களுக்கு அனுகூலங்கள் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்