புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள காசர் அம்போலி கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது சகுந்தலா சுதார்.
தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்த சாரைப் பாம்பைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் கையில் பிடித்துக் கழுத்தில் போட்டு விளையாடிய காணொளி சமூக ஊடகங்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் திருவாட்டி சகுந்தலா எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பாம்பைப் பிடித்து மிகச் சாதாரணமாகக் கையாண்டார்.
பாம்புகள்குறித்து உள்ள தவறான நம்பிக்கைகளை மாற்றவே இந்தச் செயலைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் காணொளியைக் கண்ட இணையவாசிகள் அவருடைய துணிச்சலையும் விழிப்புணர்வையும் பாராட்டி வருகின்றனர்.
70 வயதிலும் இத்தகைய துணிச்சல் இருப்பது அரிது என இணையவாசிகள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.