‘சிரிப்பழகு’ சிகிச்சையின்போது புது மணமகன் உயிரிழப்பு

ஹைதராபாத்: தான் சிரிப்பது அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட 28 வயது ஆடவர் அறுவை சிகிச்சையின்போதே மரணமடைந்தார்.

இச்சம்பவம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நிகழ்ந்தது.

லட்சுமி நாராயண விஞ்சம் என்ற அந்த ஆடவருக்கு இம்மாதம் 16ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள எஃப்எம்எஸ் அனைத்துலகப் பல்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மயக்க மருந்து அளவிற்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டதால் தன் மகன் உயிரிழந்துவிட்டதாக லட்சுமி நாராயணின் தந்தை ராமுலு விஞ்சம் குற்றம் சாட்டியுள்ளார்.

அறுவை சிகிச்சையின்போது தன் மகன் மயக்கமடைந்துவிட்டதால் தான் உடனே அங்கு வரும்படி மருத்துவமனை ஊழியர்கள் தொலைபேசி வழியாகத் தன்னிடம் கூறியதாக ராமுலு தெரிவித்தார்.

“உடனே என் மகனை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி, அங்கிருந்த மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்,” என்றார் ராமுலு.

சிரிப்பழகு அறுவை சிகிச்சை குறித்து தன் மகன் தங்களிடம் எதுவுமே கூறவில்லை என்றும் அவர் சொன்னார்.

“என் மகனுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை. அவனது இறப்பிற்கு மருத்துவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்,” என்று ராமுலு குற்றம் சுமத்தினார்.

சம்பவ நாளன்று பிற்பகல் 2.30 மணிக்கு லட்சுமி நாராயணன் அம்மருத்துவமனைக்குச் சென்றதாக ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலைய அதிகாரி வெங்கடேஸ்வர் ரெட்டி தெரிவித்தார்.

“மாலை 4.30 மணியளவில் லட்சுமி நாராயணன் அறுவை சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுசெல்லப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இரவு 7 மணியளவில் மருத்துவமனையில் அவருடைய தந்தை தொலைபேசிவழி அழைக்கப்பட்டார். உடனடியாக அவர் அருகிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோதும் அங்கு செல்லும் முன்னரே அவரது உயிர் பிரிந்துவிட்டது,” என்று திரு ரெட்டி விளக்கினார்.

ஒரு வாரத்திற்கு முன்னர்தான் லட்சுமி நாராயணனுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்றும் அடுத்த மாதம் அவரது திருமணம் நடக்கவிருந்தது என்றும் சொல்லப்பட்டது.

இதன் தொடர்பில் ராமுலு காவல்துறையில் புகாரளித்தார். அதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட பல்மருத்துவமனையின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், “மருத்துவமனை ஆவணங்களையும் அங்குள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாக காணொளியையும் ஆய்வுசெய்து வருகிறோம்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!