புதுடெல்லி: அரசு வேலைகளுக்கான தேர்வுப் படிவங்களுக்கு 18 விழுக்காடு வரி விதிக்கப்படுவதை விமர்சித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“பாஜக அரசால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. இளைஞர்களின் காயங்களில் உப்பை தேய்ப்பது போல் அக்னிவீரர் திட்டம் உட்பட பல்வேறு அரசு வேலைகளுக்கான தேர்வுப் படிவங்களுக்கு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள கல்யாண்சிங் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனையில் வேலை தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை அவர் தமது பதிவில் பகிர்ந்துள்ளார்.

