இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் கின்னஸ் சாதனை

1 mins read
75557128-dd7e-46e7-979a-68cfc2db5027
குடியரசு தின அணிவகுப்பின் ‘ஜயதி ஜெய் மம பாரதம்’ (JJMB) அங்கத்தில் 5,000க்கும் மேற்பட்ட கிராமிய, பழங்குடிக் கலைஞர்கள் படைப்புகளை வழங்கினர். - படம்: ibgnews.com / இணையம்

புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 26) இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற அந்நாட்டின் 76வது குடியரசு தின அணிவகுப்பில் கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பில் இடம்பெற்ற ஓர் அங்கத்தில் 5,000க்கும் அதிகமான கிராமிய, பழங்குடிக் கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர். இந்தியாவின் கலாசார அமைச்சு, அந்நாட்டின் தேசிய மேடைக் கலைகள் கழகமான ‘சங்கீத் நட்டக் அகாடிமி’ (Sangeet Natak Akademi) ஆகியவை ஏற்பாடு செய்து வழங்கிய ‘ஜயதி ஜெய் மம பாரதம்’ (JJMB) அங்கத்தில் அந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்தியாவின் பாரம்பரிய கிராமிய, பழங்குடிக் கலாசார அம்சங்களை அப்படைப்பு எடுத்துக்காட்டியதாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்