காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைவிலங்குடன் போராட்டம்

1 mins read
60052f5c-39ff-4508-988b-fec1d02a5f6f
குஜராத் சட்டமன்றத்திற்கு வெளியே கைவிலங்குடன் போராடிய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள். - படம்: ஏஎன்ஐ

காந்திநகர்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடுகடத்துவதை எதிர்த்து அந்நாட்டின் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கைவிலங்குடன் போராட்டம் நடத்தினர்.

தலைநகர் காந்திநகரில் உள்ள சட்டமன்றத்திற்கு வெளியே புதன்கிழமை (பிப்ரவரி 19) அப்போராட்டம் நடைபெற்றது.

அப்போது, ‘இந்தியர்கள் அவமதிக்கப்படுவதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது’ என்பது போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபின், சட்டவிரோதக் குடியேறிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளை டோனல்ட் டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார்.

அவ்வகையில், அங்குச் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் பலர் இதுவரை மூன்று விமானங்கள் மூலமாக இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இந்தியர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள தயார் என்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை வேரறுக்க வேண்டும் என்றும் அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் இந்திய நாட்டவர் 18,000 பேர் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கண்டறிந்து உள்ளதாகக் கடந்த மாதம் செய்தி வெளியானது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்