குஜராத்: இந்தியாவில், கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்த 970 பேருக்கு ரூ.11 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது என்று குஜராத் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருள்கள் குறித்து தகவல் தெரிவித்த 64 நபர்களுக்குக் காவல்துறையினர் மூலம் தலா 51,202 ரூபாயும் 169 பேருக்கு உள்துறை அமைச்சு மூலம் தலா 6,36,86,664 ரூபாயும் 737 பேருக்குப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக (NCB) குழுவின் மூலம் தலா 5,13,40,680 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்குகளில் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்கும் தனிநபருக்கு ஒரு பறிமுதலுக்கு ரூ.2,500 பரிசு வழங்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருளின் மதிப்பில் 20% பரிசாக வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தும் முதல் மாநிலம் குஜராத் என்பது குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.16,155 கோடி மதிப்புள்ள 87,607 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2,500க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.