தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே காவல்நிலையத்தில் குரு- சிஷ்யை சந்திப்பு: ருசிகர சம்பவம்

2 mins read
ee242fba-3a16-4f4b-974c-a2fd6319f0f7
காவல் ஆய்வாளர் ஜபீனா பேகத்துடன் காவலர் லால்யா நாயக் (வலது). - படம்: இந்து தமிழ் திசை

ஹைதராபாத்: தெலுங்​கானா​வில் ஒரே காவல்நிலை​யத்​தில் குரு - சிஷ்யை இணைந்து பணியாற்றி வருவது தொடர்பான காணொளி ஆந்​திரா முழுவதும் சமூக வலைத்தளத்​தில் பரவி வருகிறது.

தெலுங்​கானா​வின் விகாராபாத் மாவட்​டம், சவுத்​ரி​கூடா கிராமத்தைச் சேர்ந்​தவர் லால்யா நாயக். எம்.ஏ., பி.எட் படித்துள்ள இவர், விகாரா​பாத்​தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி​யில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

அப்போது அந்தக் கல்லூரி​யில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஜபீனா பேகம் என்ற மாணவி படிப்பதற்காகச் சேர்ந்​தார். அவருக்கான கல்விக் கட்டணத்தை லால்யா நாயக் தனது ஊதியத்​தில் இருந்து கட்டி​னார்.

ஜபீனா பேகத்தை நன்கு ஊக்கமளித்து படிக்க வைத்தார் லால்யா நாயக்.

இந்தச் சூழலில், ஜபீனாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்த போது, அதனை தடுத்து நிறுத்தி ஜபீனாவைத் தொடர்ந்து லால்யா நாயக் படிக்க வைத்​தார்.

இதனிடையே கொரோனா பெருந்​தொற்றுக் காலத்​தில் மாணவர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்ததால், பேராசிரியர் வேலையை இழந்த லால்யா நாயக் அதன்பிறகு காவலர் தேர்​வில் தேர்ச்சி பெற்​றார்.

தற்போது அவர் மொய்​னாபாத் காவல்நிலை​யத்​தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பட்டப்​படிப்பை முடித்த ஜபீனா பேகம் 2024ல் காவல் ஆய்வாளர் (எஸ்ஐ) தேர்​வில் தேர்ச்சி பெற்று, ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு மொய்​னாபாத் காவல் நிலை​யத்​தில் பணி நியமனம் பெற்​றார்.

முதல் நாள் எஸ்ஐ சீருடை​யில் வந்த ஜபீனா பேகத்தைப் பார்த்து லால்யா நாயக் இன்ப அதிர்ச்சி அடைந்​தார். எனினும், ‘சல்யூட்’ அடித்து அவரை உற்சாகத்​துடன் வரவேற்​றார் லால்யா.

பிறகு அவருடன் தனது மகிழ்ச்​சியைப் பரிமாறிக்​கொண்​டார்.

ஜபீனா பேகமும் தனது ஆசிரியர் லால்யா நாயக்கை பார்த்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார்.

தான் படிப்பு சொல்​லிக்கொடுத்து, படிக்க வைத்த ஒரு பெண், தனக்கு அதிகாரியாக வந்ததைப் பெரு​மையாகக் கருது​வதாக லால்யா நாயக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்