தலைமுடி வெட்டும் கொள்ளைக்கும்பல்: பீகார் மக்கள் அதிர்ச்சி

தலைமுடி வெட்டும் கொள்ளைக்கும்பல்: பீகார் மக்கள் அதிர்ச்சி

2 mins read
33c2e556-5898-49fe-b261-ec11bf292f2e
கொள்ளைக்கும்பலை ‘பால் கடர்வா’ (தலைமுடி வெட்டும் கும்பல்) என்று பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். - படம்: என்டிடிவி

பாட்னா: வீடு புகுந்து நகைகளைக் கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் அந்த வீடுகளைக் சேர்ந்த பெண்களின் தலைமுடியை வெட்டிச்செல்வது பீகார் கிராம மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

அங்கு தர்பங்கா மாவட்டத்தில் உள்ள தர்ஹார் கிராமத்தில் அண்மைய சில வாரங்களாக தொடர் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகின்றன.

கொள்ளைச் சம்பவங்களுக்கு இடையே சரியாக எட்டு நாள்கள் இடைவெளி காணப்படுகிறது.

மேலும், கொள்ளையடிக்கும் வீடுகளில் நகைகளைப் பறித்துச் செல்லும் கொள்ளைக்கும்பல், அவ்வீடுகளிலுள்ள பெண்களின் தலைமுடியையும் வெட்டிச் செல்கின்றனர்.

இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இதுதான் கிராம மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது என்றும் என்டிடிவி ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது.

அந்தக் கொள்ளைக்கும்பலை ‘பால் கடர்வா’ (தலைமுடி வெட்டும் கும்பல்) என்று பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

தர்ஹார் கிராமத்தில் முதல் கொள்ளைச் சம்பவம் ஜூலை 9ஆம் தேதி பதிவாகியுள்ளது. அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டிலிருந்த ரொக்கப்பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துள்ளது.

அங்கிருந்து தப்பிச்செல்லும் முன்பு அந்த வீட்டைச் சேர்ந்த கரிஷ்மா தேவியின் தலைமுடியையும் வெட்டியெடுத்துச் சென்றனர்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் வியாழக்கிழமை (ஜூலை 16) அன்று இரண்டாவது கொள்ளைச்சம்பவம் பள்ளி ஆசிரியர் ஒருவரது வீட்டில் அரங்கேறியது.

அங்கும் விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடித்த பின்னர், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு சிறுமியின் தலைமுடியை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் வியாழக்கிழமையைக் குறிவைத்து தலைமுடியை வெட்டியெடுக்கும் ஒரு குறிப்பிட்ட ஒரு பாணியைக் கடைப்பிடிப்பதாகக் காவல்துறையினர் கருதுகின்றனர்.

தக்கார் கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களில் தீவிரச் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்