தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹரியானா தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

1 mins read
5d3acce9-84d6-451a-ada2-dbafb3b350cc
காங்கிரஸ் கட்சியின் முழு வாக்குறுதிகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதையடுத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து பிரசாரங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே பிரசாரத்தின்போது தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் சண்டிகரில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

ஹரியானாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000, ரூ. 500 மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், பழைய ஓய்வூதியத் திட்டம், இரண்டு லட்சம் பேருக்கு அரசு வேலை, 500 யூனிட் வரை இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார் விலை, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்கெனவே இந்த 7 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இதையடுத்து ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முழு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் சனிக்கிழமை (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ளது.

சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, அசோக் கெலாட் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

குறிப்புச் சொற்கள்