சக ஊழியர்களை அச்சுறுத்திய ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் பணியிடை நீக்கம்

1 mins read
b71d0a9a-4321-4ee5-aebf-9ee5f6fc0d8c
படம்: சமூகஊடகம் -

இந்தியாவின் கோல்கத்தா நகரில் செயல்படும் ஹெச்டிஎப்சி வங்கி ஒன்றில் மேலாளர் ஒருவர் தமது சக ஊழியர்களை அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலாளரும் வங்கி ஊழியர்களும் காணொளி வாயிலாக சந்திப்பை நடத்தியுள்ளனர். அப்போது மேலாளர், வங்கியின் காப்புறுதிகளைப் போதிய அளவில் விற்காத காரணத்தால் சக ஊழியரை பயங்கரமாகத் திட்டியும் மிரட்டியும் உள்ளார்.

அதன் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஹெச்டிஎப்சி வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மரியாதையாகவும் பொறுப்புடனும் நடத்தப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் ஹெச்டிஎப்சி குறிப்பிட்டது.

வங்கியின் விற்பனைப் பிரிவுகளில் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்று அடிக்கடி அச்சுறுத்தப்படுவதாக இணையவாசிகளும் விற்பனைப்பிரிவில் உள்ளவர்களும் லிங்ட்இன் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்