தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்சரிக்கையாக இருக்கும் இந்திய சுகாதாரத்துறை

1 mins read
ddce2897-93ea-4b16-95c3-5abdd318a90b
தற்போது இந்தியாவில் சுவாசத் தொற்றுகள், பருவகால காய்ச்சல் பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. - படம்: இந்திய ஊடகம்

டெல்லி: சீனாவில் புதிதாக காய்ச்சல் கிருமி வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த காய்ச்சல் கிருமி ‘எச்எம்பிவி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிருமியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 ‘எச்எம்பிவி’ கிருமி சாதாரண சளியை ஏற்படுத்தும் பிற ‘வைரஸ்’ போன்றதே. இது, இளம்வயதினர், முதியோருக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும் என்று சுகாதாரப் பணிகளின் தலைமை இயக்குநர் அதுல் கோயல் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் சுவாசத் தொற்றுகள், பருவகால காய்ச்சல் பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எச்சரிக்கையாகவும் உள்ளோம். தற்போது யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்