ஆந்திராவில் 55 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம்

1 mins read
79d8fcd9-f0a2-4524-a7f1-201dcad0105f
ஆந்திராவில் சரிவர வேலைக்கு வராத 55 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். - படம்: கோப்புப்படம்

ஆந்திரா: ஆந்திர மாநில அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள் சரிவர வேலைக்கு வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டம், உய்யூரைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.

அதில் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் கடந்த ஓர் ஆண்டாக எந்தவித அனுமதியோ விடுப்போ எடுக்காமல் வேலைக்கு வராமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 55 அரசு மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்