புதுடெல்லி: ரயில் நிலையத்தில் தின்பண்டங்களை விற்று பிழைப்பு நடத்தும் ஒரு எளிய வியாபாரி, தன்னை ஏமாற்றிய பயணியிடம் பணத்தைப் பெறுவதற்காக, ஓடும் ரயிலைத் துரத்திச் செல்லும் உருக்கமான காணொளி தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
ரயில் நிலையத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்ட ஒரு பயணி, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் ரயில் கிளம்பியவுடன் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
தன்னுடைய சொற்ப பணத்தை இழக்க மனமில்லாத அந்த வியாபாரி, பயணிகள் நிறைந்த அந்த விரைவு ரயிலை வெகுதூரம் ஓடித் துரத்திச் செல்கிறார்.
ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடும் அவர், பணத்தைத் தருமாறு அந்தப் பயணியிடம் சைகை மூலம் மன்றாடிக் கேட்கும் காட்சி, பார்ப்போர் நெஞ்சைப் பிளக்கும் வண்ணம் இருந்தது.
பிழைப்புக்காகப் போராடும் ஒரு எளிய மனிதரின் வலி(மை)யை இந்தக் காணொளி வெளிப்படுத்துவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

