இந்தியாவின் வடமேற்கில் ஜூன் மாதத்தில் வெப்பம் தொடரும்

1 mins read
0b25f08f-7841-416f-985d-3242a8cbeccc
இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் மத்தியப் பகுதிகளிலும் கடும் வெப்ப அலை மே 30ஆம் தேதியிலிருந்து மெதுவாகத் தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: பிக்சாபே

இந்தியாவில் கடும் வெப்ப அலையை எதிர்நோக்குவோருக்கு நற்செய்தி இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் மத்தியப் பகுதிகளிலும் கடும் வெப்ப அலை மே 30ஆம் தேதியிலிருந்து மெதுவாகத் தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடமேற்குப் பகுதியிலும், மேற்கு இமாலய வட்டாரத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலைத் துறை தெரிவித்தது.

இருப்பினும், ஜூன் மாதத்தில் வெப்பமும், ஈரத்தன்மையும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வெப்ப அலையின் தணிப்பு நீண்ட நாள் நீடிக்காது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை பெய்யும் என்றும், அடுத்த சில நாள்களில் வடகிழக்கு மாநிலங்களிலும் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்