கொச்சி: ‘டாணா’ சூறாவளி காரணமாக கேரள மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா கடற்கரைப் பகுதியில் புயல் நிலை கொண்டிருப்பதன் காரணமாகவே கேரளாவில் மழை பெய்வதாக இந்திய வானிலை ஆய்வகம் கூறியது.
கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டயம், எர்ணாகுளம் இடுக்கி, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வகம் கணித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த மாவட்டங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
“டாணா” சூறாவளி காரணமாக தமிழகத்திலும் ஆந்திராவிலும் பல்வேறு பலத்த மழை பெய்து வருகிறது.

