இந்தியாவில் மே மாதம் அதிக மழைப்பொழிவு: வானிலை மையம் கணிப்பு

இந்தியாவில் மே மாதம் அதிக மழைப்பொழிவு: வானிலை மையம் கணிப்பு

1 mins read
8f273373-c9f2-480c-a8bf-002d2fb570f9
மழைப் பொழிவானது நாடு முழுவதும் சீராக இருக்காது என்றும் வடகிழக்கு மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்தைவிடக் குறைவான மழையே பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. - படம்: ஆவாஜ் தி வாய்ஸ்

புதுடெல்லி: நடப்பாண்டு மே மாதம் இந்தியாவில் வழக்கத்தைவிட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்திற்கான ஒட்டுமொத்த மழைப்பொழிவு சராசரி அளவைவிட 110 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மே மாதத்திற்கான சராசரி மழைப்பொழிவு 64.1 மில்லி மீட்டர் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் நடப்பாண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட அதிக மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோடை காலத்தின் தொடக்கத்தில் வீசக்கூடிய வெப்ப அலைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றும் என்கிறார்கள் நிபுணர்கள்.

எனினும், மழைப் பொழிவானது நாடு முழுவதும் சீராக இருக்காது என்றும் வடகிழக்கு மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் வழக்கத்தைவிடக் குறைவான மழையே பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம் பல்வேறு பகுதிகளில் கூடுதல் மழைப்பொழிவு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் வெப்பத்தைத் தணிக்கவும் உதவும் என்றும் குறுகிய காலத்தில் பெய்யும் தீவிர மழை நகர்ப்புற வெள்ளத்திற்கும் விவசாயப் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்