தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் கடும் பனிமூட்டத்தால் விமானங்கள், ரயில்கள் தாமதம்

1 mins read
26af6c8b-3c22-4dcd-8e45-e1a0e9f43df7
பனி மூட்டத்தால் விமானங்கள் தாமதம். - படம்: ஊடகம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், விமானங்கள், ரயில்கள் வருகை தாமதமாகின.

கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.

டெல்லி அனைத்துலக விமான நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு பயணிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறோம்,” என்று தெரிவித்துள்ளது.

டெல்லியில் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்