தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு தொடர்வதால் நீர்நிலைகள் உறைந்தன

1 mins read
29da4e15-9a87-4b39-881e-c24dd8066d25
ஜம்மு காஷ்மீரில் சனிக்கிழமை உறைந்து கிடந்த ஏரியின் தோற்றம். - படம்: ஏஎஃப்பி

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 21ஆம் தேதியில் இருந்து அங்கு கடுமையான பனிப்பொழிவு தொடங்கியது. அது திங்கட்கிழமை வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்குள்ள ஏரிகளின் மேற்பரப்பு மற்றும் குடிநீர்க் குழாய்கள் உறைந்த நிலையில் காணப்படுகின்றன. அதனால் அங்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

கடுமையான பனிப்பொழிவால், ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை முடங்கியுள்ளது. அந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்தச் சாலையில் உறைந்து கிடக்கும் பனியை அப்புறப்படுத்தும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக, ஸ்ரீநகா் விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை விமானங்களின் புறப்பாடு-வருகை ரத்து செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்