பாரிஸ் அரும்பொருளகத்தில் திருட்டு: கொள்ளையர்கள் தொடாத இந்திய வைரம்

1 mins read
80a62083-dc3b-40ca-861d-709140c2b0a3
பாரிசின் புகழ்பெற்ற லூவ்ரே அரும்பொருளகத்தில் எட்டு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகரான பாரிசின் புகழ்பெற்ற லூவ்ரே அரும்பொருளகத்தில் எட்டு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நகைகளை ஏழு நிமிடங்களில் கொள்ளையர்கள் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி கொள்ளையடித்தனர்.

அக்டோபர் 19ஆம் தேதி அத்திருட்டில் தொடர்புடைய கொள்ளையர்கள் இன்னும் கைதுசெய்யப்படாத நிலையில், ரூ. 525 கோடி மதிப்புள்ள ஒரு பெரிய வைரத்தை மட்டும் அவர்கள் தொடாமல் விட்டுச் சென்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட 140.6 காரட் கொண்ட அந்த வைரக் கல்லை ரீஜண்ட்’ வைரம் என அழைப்பர்.

மிகவும் மதிப்புமிகுந்த அது, சாபம் பெற்ற வைரம் என்றும் கூறப்படுகிறது.

1701ஆம் ஆண்டு இந்தியாவில் அடிமை ஒருவரால் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை நாட்டை விட்டுத் தப்பிக்க உதவுவதாக உறுதியளித்த கப்பல் தலைவனே அவரைக் கொன்றுவிட, வைரம் ஐரோப்பிய அரசவையை வந்து சேர்ந்தது.

கடைசியாக, இங்கிலாந்து வந்தடைந்த அந்த வைரத்தைச் சிறிய கற்களாக வெட்டினர்.

இவற்றில் ஒன்று லூயிஸ் XV இன் ஆட்சியாளரான (ரீஜண்ட்) பிலிப் II க்கு விற்கப்பட்டது, லூயிஸ் XV, லூயிஸ் XVI ஆகியோரின் கிரீடங்களையும் மேரி அன்டோனெட்டின் தொப்பியையும் அது அலங்கரித்தது.

மேரி கிளாரியின் கூற்றுப்படி, பிரெஞ்சு புரட்சி நடந்தபோது, ​​லூயிஸ் XVI மற்றும் மேரி அன்டோனெட் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். பின்னர், நெப்போலியன் போனபார்ட் தனது வாளில் பொருத்தினார். 1821ஆம் ஆண்டு அவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதனால், ரீஜண்ட் வைரம் எங்குச் சென்றாலும் சோகத்தைச் சுமந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்