சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
2006 - 2010 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ஐ. பெரியசாமியையும் அவரது குடும்பத்தினரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

