டெல்லி விமான நிலையத்தில் ரூ.48 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

டெல்லி விமான நிலையத்தில் ரூ.48 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்

1 mins read
17718130-d46b-46b1-8704-e14f6d517b32
ஹைட்​ரோ​ஃபோனிக் என்​பது மண்​ணுக்​குப் பதிலாக, ஊட்​டச்​சத்​துகள் நிறைந்த நீரில் வளர்க்​கப்​படும் வீரி​யம் மிக்​க ஒருவகை கஞ்​சா ஆகும்​. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்​திரா காந்தி அனைத்துலக விமான நிலை​யத்​தில் ரூ.48 கோடி மதிப்​பிலான கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளதையடுத்து டெல்லியில் காவல்துறை கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

இந்தியாவில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், தாய்​லாந்​தில் இருந்து விமானம் மூலம் டெல்​லிக்கு போதைப் பொருள் கடத்தி வரு​வ​தாக சுங்​கத்துறை அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​துள்​ளது. இதையடுத்து சனிக்கிழமை (மே 23) இந்​திரா காந்தி அனைத்துலக விமான நிலை​யத்தில் வந்திறங்கிய அனைத்துப் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்​கத்துறை அதி​காரி​கள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்​போது, தாய்லாந்து தலைநகர் பேங்​காக்​கில் இருந்து வந்த இரு பயணிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்த அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. தாய்​லாந்து குடிமக்களான இருவரையும் தனியே அழைத்துச் சென்று விசாரித்தபோது ரூ.48 கோடி மதிப்​புள்ள ‘ஹைட்​ரோ​ஃபோனிக்’ என்ற உயர் கஞ்சாவை இருவரும் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக கடத்தல் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹைட்​ரோ​ஃபோனிக் என்​பது மண்​ணுக்​குப் பதிலாக, ஊட்​டச்​சத்​துகள் நிறைந்த நீரில் வளர்க்​கப்​படும் வீரி​யம் மிக்​க ஒருவகை கஞ்​சா ஆகும்​.

முதல் பயணியிடம் இருந்து 29 கிலோ எடை​யுள்ள நான்கு உறைகளும் மற்றொரு பயணி​யின் பையில் இருந்​து சுமார் 19 கிலோ எடை​யுள்ள இரண்டு உறைகளும் மீட்​கப்​பட்​ட​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆகப்​பெரிய போதைப்பொருள் வேட்​டைகளில் ஒன்​றாக இது கருதப்​படு​கிறது என டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்