மணிப்பூரிலிருந்து 27 மியன்மார் நாட்டினர் நாடு கடத்தல்

1 mins read
2f919d7d-413d-40ed-ad1c-e75bcd0a3c5b
இந்திய-மியன்மார் நட்புறவு வாயில் வழியாக சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை இந்திய அதிகாரிகள் மியன்மார் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். - படம்: இந்திய ஊடகம்

இம்பால்: மணிப்பூரில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்தக் கலவரம் தொடர்பாக அண்டை நாடான மியன்மாரிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

எனவே சட்டவிரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக் காவல் நிலையங்களில் சிறை வைத்தது.

இவ்வாறு சிறைவைக்கப்பட்ட 27 பேரின் தண்டனைக் காலம் நிறைவடைந்துள்ளது. எனவே அவர்கள் 27 பேரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இந்திய-மியன்மார் நட்புறவு வாயில் வழியாக அவர்களை இந்திய அதிகாரிகள் மியன்மார் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அண்மையில், டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18 பங்ளாதேஷியர் அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர்.

இந்தியா அதன் அண்டை நாடுகளிலிருந்து வரும் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

குறிப்புச் சொற்கள்