பார்வையாலேயே மோதிக்கொண்ட ஓட்டுநர்கள்

பார்வையாலேயே மோதிக்கொண்ட ஓட்டுநர்கள்

1 mins read
62ba5d74-eda9-44ef-afdc-9e5e5b7d671e
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓட்டுநர்கள் நகராமல் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தார்கள். - படம்: இணையம்

அமைதியான மோதலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சாலையில் அவ்வப்போது ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால், இணையவாசிகளை ஒரு குறிப்பிட்ட மோதல் பெரிதும் பேசவைத்துள்ளது.

அண்மையில் இணையத்தில் வலம்வரும் காணொளி ஒன்றில், காருக்கும் பேருந்துக்கும் இடையே அந்த மோதல் நேர்ந்தது.

எதிரெதிரே இரு வாகனங்களும் வந்ததை அடுத்து, இரண்டுமே வழிவிடாமல் அப்படியே நின்றன.

பொதுவாக, ஒருவராவது வாகனத்தைச் சற்று திருப்பி வழிவிடுவார். ஆனால், இந்த இரண்டு ஓட்டுநர்களும் விடுவதாக இல்லை.

அதுதான் அனைவருக்கும் வேடிக்கையாக அமைந்துவிட்டது.

இருவரும் வெகுநேரமாக வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பேருந்து ஓட்டுநர் கண்ணிமைக்காமல் கார் ஓட்டுநரை உற்று நோக்கினார்.

இதற்கிடையே, ஒருசில வாகனங்கள் சாலை ஓரமாகச செல்வதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.

சுமார் இரண்டு நிமிடங்கள், 22 வினாடிகளுக்குப் பிறகு பேருந்தை நகர்த்தத் தொடங்கினார் ஓட்டுநர்.

Watch on YouTube

குறிப்புச் சொற்கள்