தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகிலேயே ஆக உயரத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி

1 mins read
c46fe9ba-7935-4dbf-9e12-5fb2c418d6b1
2022 இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது தாஷிகங்கில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி. - கோப்புப்படம்: ஊடகம்

சிம்லா: இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தாஷிகங் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி, உலகிலேயே ஆக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கடல்மட்டத்திலிருந்து 15,256 அடி உயரத்தில் அந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது.

இந்தியா-சீனா எல்லையில் இருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ள அந்த வாக்குச்சாவடி, தாஷிகங், கெட்டே என இரண்டு கிராமங்களை உள்ளடக்கியது. அவ்வூர்களில் மொத்தம் 75 பேர் வசிக்கின்றனர். அதில் 30 ஆண்கள், 22 பெண்கள் என 52 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது, 52 பேரில் 51 பேர் வாக்களித்தனர்.

சென்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அங்கு முதன்முறையாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இம்முறை அம்மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்