நீர்யானைக் கன்றுக்கு உணவளிப்பதற்காக அதைக் கூண்டிலிருந்து எடுக்க முயன்ற விலங்கியல் பூங்கா காப்பாளரை, கைகால்கள் சிதைந்துபோகும் அளவுக்கு தாய் நீர்யானை தாக்கியது.
இதையடுத்து, ஜார்கண்டின் பிர்சா உயிரியல் பூங்காவில் காப்பாளராக இருந்த சந்தோஷ் குமார் மாட்டோ கடுமையான காயங்கள் காரணமாக ஜூலை 28ஆம் தேதி காலையில் உயிரிழந்தார்.
நீர்யானையால் ஜூலை 25ஆம் தேதி தாக்கப்பட்ட 54 வயது மாட்டோ, மறுதினம் அறுவை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
தொடக்கத்தில் அவர் அபாயநிலையில் இல்லை என்று கூறப்பட்ட பின்னர் உயிரிழந்துவிட்டார் என விலங்கியல் பூங்கா நிர்வாகி ஜபர் சிங் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மாட்டோவின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

