தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹோலி கொண்டாட்டம்: லாலு மகனுக்கு அபராதம், காவலருக்கு இடமாற்றம்

1 mins read
33518cf8-522a-41fa-9422-3af13a482ed4
சீருடையில் இருந்த காவலரை நடனமாட வற்புறுத்திய பீகாரின் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ்.  - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் நடத்திய ஹோலி விழாவில் சீருடையில் நடனம் ஆடிய காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

பீகாரின் முன்னாள் அமைச்சரான தேஜ் பிரதாப் யாதவ் தமது வீட்டில் ஹோலிப் பண்டிகை கொண்டாடினார். அப்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் காவலர் தீபக் குமார் என்பவர் இருந்தார்.

அக்காவலரைக் கொண்டாட்டத்தின்போது நடனம் ஆடுமாறு யாதவ் வற்புறுத்தினார். அவர் மறுக்கவே, அவரைப் பணிநீக்கம் செய்துவிடுவேன் எனத் தேஜ் பிரதாப் மிரட்டினார்.

அதற்குப் பயந்து அக்காவலர் நடனமாடினார். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில், காவலர் சீருடையில் நடனமாடியது குறித்து புகார்கள் எழுந்தன.

காவலர் தீபக் குமார், தேஜ் பிரதாப்புக்கான பாதுகாப்புப் பணியிலிருந்து நீக்கப்பட்டு வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக வேறு ஒரு காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார் எனக் காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணியாதது, வாகனத்துக்குக் காப்புறுதி இல்லாதது ஆகிய காரணங்களுக்காக தேஜ் பிரதாப்புக்கு நான்காயிரம் ரூபாயைப் போக்குவரத்து காவல்துறை அபராதமாக விதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்