அகமதாபாத்: குஜராத்தின் வித்லாபூர் பகுதியில் இயங்கிவரும் உற்பத்தி ஆலையை ரூ.920 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், இரு சக்கர வாகனத்தயாரிப்பு நிலையத்தின் திறன் 6.5 லட்சம் வாகனங்களாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2027ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி திறன் 26.1 லட்சமாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கப் பணிகள் மூலம், உலகிலேயே ஹோண்டா நிறுவனத்தின் ஆகப்பெரிய உற்பத்தி தொழிற்சாலையாக, வித்லாபூர் மாறவிருக்கிறது.
125 சிசி திறன் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் இலக்கோடு இந்தப் புதிய தொழிற்சாலை உற்பத்தி நிலையம் தொடங்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் 1,800 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த விரிவாக்கத்தின் மூலம், இந்தியாவில் மொத்தமுள்ள நான்கு உற்பத்தி தொழிற்சாலைகளின் தற்போதைய வாகன உற்பத்தியான 61.4 லட்சம் என்பது 70 லட்சம் வாகனங்கள் என்ற நிலைக்கு உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.


