இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது வெயில் கொளுத்தி வருகிறது.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் வெயில் வழக்கநிலையைவிட அதிகமாகவுள்ளதால் மக்கள் தவிக்கின்றனர்.
வெயிலின் அதிகமாக இருப்பதை மற்றப் பகுதி மக்களுக்குக் காட்டும் விதமாக மேற்கு வங்கத்தில் ஆடவர் ஒருவர் வெயிலை வைத்தே முட்டை சமைத்து காணொளியாக வெளியிட்டுள்ளார்.
அக்காணொளியை ஆடவர் ஏப்ரல் 9ஆம் தேதி சமூக ஊடகங்கள் வழியாக வெளியிட்டுள்ளார்.
காணொளியில் ஆடவர் வெயிலில் வைத்த வாணலியில் முட்டையை உடைத்து ஊற்றுகிறார். சில நிமிடங்களில் அந்த முட்டை உண்ணும் பதத்திற்கு வெந்துவிடுகிறது.
காணொளியை 2.1 மில்லியனுக்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.
தற்போது அம்மாநிலத்தில் வெப்பம் 40 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக உள்ளது. அதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.