மரங்களைக் கட்டியணைக்க பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி

மரங்களைக் கட்டியணைக்க பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி

1 mins read
561bcddd-e15a-4505-9092-4da5e7da1cb5
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், மரங்களைக் கட்டியணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. - படம்: ஊடகம்

அமராவதி: ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் மரங்களைக் கட்டியணைக்கும் நடைமுறை அறிமுகமாகி உள்ளது.

பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) கூடிய பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அங்குள்ள மரங்களை ஏறக்குறைய இரண்டு நிமிடங்களுக்குக் கட்டியணைத்தபடி நின்றனர்.

அதனால், தங்களுக்கு மன அழுத்தம் குறைந்து, ஒருவித மன அமைதி கிடைத்ததாகவும் புது அனுபவத்தைப் பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“இனி வாரந்தோறும் மரங்களைக் கட்டியணைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்,” என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

ஆந்திரா முழுவதும் இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய இருப்பதாக அம்மாநில பள்ளித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரங்களைக் கட்டி அணைத்தால் மன அமைதி கிடைக்கும், தாவரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்