நூற்றுக்கணக்கான பங்ளாதேஷியர்கள் வெளியேற்றம்: அசாம் முதல்வர்

நூற்றுக்கணக்கான பங்ளாதேஷியர்கள் வெளியேற்றம்: அசாம் முதல்வர்

1 mins read
cdab6513-79f9-4a65-b6f1-f591b4f371c7
சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தும்போது அசாம் அரசு மனிதாபிமான அடிப்படையில் செயல்படுகிறது என்றும் மனித உரிமை மீறல்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது என்றும் முதல்வர் ஹிமந்த பிஸ்வா மேலும் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டரஸ்

கௌஹாத்தி: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அசாம் மாநிலத்திலிருந்து 1,679 பங்ளாதேஷ் குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இத்தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்துவதில் அம்மாநில அரசு உறுதியுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் இந்திய அரசின் உத்தரவுகளை அசாம் மாநில அரசு கண்டிப்புடன் பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 2026 ஜூன் 30ஆம் தேதி வரையிலான இரண்டாண்டு காலத்தில் அசாமிலிருந்து 1,679 பங்ளாதேஷ் குடிமக்கள் வெளியேற்றப்பட்டு தங்களுடைய தாய்நாட்டிற்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தும்போது அசாம் அரசு மனிதாபிமான அடிப்படையில் செயல்படுகிறது என்றும் மனித உரிமை மீறல்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது என்றும் ஹிமந்த பிஸ்வா மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்