ஹைதராபாத்-சென்னை புல்லட் ரயில் திட்டப்பணிகள் தொடங்கின

ஹைதராபாத்-சென்னை புல்லட் ரயில் திட்டப்பணிகள் தொடங்கின

1 mins read
d1e2a6c0-802c-4137-8629-ab0429a318f9
தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. - படம்: எக்கனாமிக் டைம்ஸ்

சென்னை: ஹைதராபாத், சென்னை இடையேயான புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

புல்லட் ரயில் வழித்தடத்தை இறுதி செய்யும் களப்பணி தொடங்கியது.

தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது.

புல்லட் ரயில் சேவை மூலம் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களுக்கான பயண நேரம் வெகுவாக குறையும் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து மூன்று மணி நேரத்துக்குள் ஹைதராபாத் சென்றுவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் புல்லட் ரயிலின் வழித்தடத்தை இறுதி செய்வதற்கான ஆய்வு தொடங்கியுள்ளது.

ரங்கா ரெட்டி பகுதியில் இருந்து நல்கொண்டா, விகாராபாத் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் ரயில் பாதையை அளவிட்டு குறியீடுகள் அமைக்கப்படுகின்றன.

ஷம்ஷாபாத் மகேஸ்வரம், கண்டுகூர், யம்சாரம் ஆகிய பகுதிகள் வழியாக நல்கொண்டா மாவட்டத்தின் நம்பள்ளி நோக்கி இந்தப் பாதை செல்கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

முழுமையான ஆய்வுக்கு பிறகே ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்