நண்பனின் தலையை துண்டித்து, இதயத்தை அறுத்து எடுத்த ஆடவர்

1 mins read
4be8d6e3-774c-4874-9c37-e5b7e508d0f3
(இடமிருந்து) கொலை செய்த கிருஷ்ணாவும் கொல்லப்பட்ட நவீனும் (படம்: இந்திய ஊடகம்) -

தன் நண்பனை கொன்று, அவன் தலையை வெட்டி, இதயம், பிறப்புறுப்பு ஆகியவற்றை துண்டித்துள்ளார் 22 வயது ஆடவர் ஒருவர். கொடூரமாக இந்தக் கொலையை செய்த அந்த ஆடவர் பின் காவல்துறையிடம் சரணடைந்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நவீன், ஹரிஹர கிருஷ்ணா ஆகிய இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இருவரும் ஒரே பெண்ணை விரும்பினர். நவீன் தன்னுடைய காதலை அந்தப் பெண்ணிடம் முதலில் வெளிப்படுத்தியதால், அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்தனர். சில ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், அந்தப் பெண்ணும் கிருஷ்ணாவும் ஒருவரையொருவர் பார்க்கத் தொடங்கினர். இருப்பினும் அந்த பெண்ணும் நவீனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தனர். இது கிருஷ்ணாவுக்கு பிடிக்கவில்லை.

மூன்று மாதங்களாக தக்க சமயத்திற்காக காத்திருந்த கிருஷ்ணா, சில நாள்களுக்கு முன் நவீனை அடித்துக் கொன்றுள்ளான். பின்னர் நவீனின் தலை, பிறப்புறுப்பு, விரல்கள் ஆகியவற்றை துண்டித்துள்ளான். அதை புகைப்படம் எடுத்து தனது காதலிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளான்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.