இட்லி சிலருக்குப் பிடித்தமான உணவுகளில் ஒன்றாக இருக்கும்.
பிடித்த உணவு என்பதற்காக ஓர் ஆண்டில் மட்டும் ஆறு லட்சம் ரூபாய்க்கு இட்லி வாங்கலாமா ?
அவ்வளவு இட்லியை வாங்கியுள்ளார் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு நபர்.
இந்தியாவின் ஸ்விகி உணவு விநியோக நிறுவனம் உலக இட்லி தினத்தை முன்னிட்டு அந்நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர்கள் கட ந்த ஆண்டில் எத்தனை இட்லி வாங்கினார்கள் என்ற தகவல்களை வெளியிட்டது.
அதில் கடந்த 12 மாதங்களில் மட்டும் இந்தியாவில் அந் நிறுவனம் 33 மில்லியன் இட்லியை விநியோகம் செய்துள்ளது.
அதிக இட்லி விநியோகிக்கப்பட்ட நகரங்களில் முதல் மூன்று இடங்களில் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்கள் உள்ளன.
தரவுகளின் படி ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு நபர் 8,428 தட்டு இட்லிகளை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய்.
தமது நண்பர்கள், உறவினர்கள் என பல நகரங்களில் உள்ளவருக்கு அந்த நபர் இட்லியை காலை உணவிற்காக ஸ்விகி மூலம் வாங்கிக்கொடுத்துள்ளார்.