விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைத் தயாரிப்புப் பணிகள் மும்முரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைத் தயாரிப்புப் பணிகள் மும்முரம்

1 of 5
படம்: தினமணி
படம்: தினமணி
படம்: தினமணி
படம்: தினமணி
படம்: தினமணி

24 Aug 2026 - 7:55 pm

1 mins read

அமிர்தசரஸ்: அடுத்த மாதம் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை இந்தியா முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிள்ளையார் சிலைகளைத் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளைத் தயாரிப்பதில் பலரும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இயற்கைப் பொருள்களைக் கொண்டு கைவினைக் கலைஞர்கள் சிலைகளைத் தயாரித்து வருகிறார்கள்.

களிமண் கூழ், காகிதக்கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு, பசுமாட்டுச் சாணம் போன்ற எளிதில் மக்கக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி கண்களைக் கவரும் சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

குறிப்பாக, பெண் கலைஞர்கள் பலரும் ஒருங்கிணைந்து சிலைகளுக்கு வர்ணம் தீட்டுவது, கிரீடம், ஆயுதங்களை வடிவமைத்து இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

நீர்நிலைகளை மாசுபடுத்தாத வகையில் நீரில் எளிதில் கரையும் இந்தச் சிலைகள், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று விற்பனைக்குத் தயாராகி வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்