நாகப்பட்டினம் மீனவர்கள் சிறைபிடித்த கடற்கொள்ளையர் குறித்து முக்கியத் தகவல்

நாகப்பட்டினம் மீனவர்கள் சிறைபிடித்த கடற்கொள்ளையர் குறித்து முக்கியத் தகவல்

1 mins read
c16bb5b8-1c84-4d29-87a4-0b5d618a4987
பிடிபட்ட கடற்கொள்ளையர் அஜந்தன். - படம்: இந்து தமிழ் திசை

நாகப்பட்டினம்: தமிழக மீனவர்​களால் சிறைபிடிக்​கப்​​பட்ட இலங்கைக் கடற்​கொள்​ளை​யர் குறித்த அதிர்ச்​சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 26ஆம் தேதி மீன்​பிடிக்​கச் சென்ற நாகப்பட்டினம் மீனவர்களைத் தாக்கி உடைமைகளைக் கொள்ளையடித்தபோது ஏற்பட்ட மோதலில் இலங்கையைச் சேர்ந்த மூன்று கடற்கொள்ளையர்களில் ஒருவரை மீனவர்கள் சிறைபிடித்தனர். மற்ற இருவரும் படகில் ஏறித் தப்​பினர்.

பிடிபட்டவர் இலங்கைக் காங்​கேசன்​துறையைச் சேர்ந்த அயந்​தன் என்​பது தெரிய​வந்​தது. பின்​னர் அவரை கீழையூர்க் காவல்துறையிடம் மீனவர்கள் ஒப்​படைத்​தனர்.

இந்தச் சம்​பவம் தொடர்​பாக வேதா​ரண்​யம் கடலோரக் பாதுகாப்புக் காவல்துறையினர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்தனர். இந்​நிலை​யில், பிடிபட்ட கொள்ளையரின் உண்​மை​யான பெயர் அஜந்​தன் என்​பதும் இலங்​கை​ பலாலியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழக மீனவர்​கள் மீதான பல தாக்குதலுக்கு அஜந்​தனும் அவரது சகோ​தரர்​கள், சகோ​தரி​யின் மகன்​கள்தான் காரணம் என்று கூறப்​படு​கிறது.

அவர்​கள் தொடர்ச்​சி​யாகத் தமிழக மீனவர்​களைத் தாக்கிக் கொள்​ளை​யடிக்​கும் வேலைகளில் ஈடு​பட்டு வந்​துள்​ளனர்.

இந்நிலையில், அவர்களின் இச்செயல் இருநாடுகளிடையே நிலவும் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்