விமான நிலையங்களில் பயணப்பை மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு

விமான நிலையங்களில் பயணப்பை மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
08e1d4a6-faad-40ee-80c3-73d7334466a0
இந்​திய விமான நிலைய ஆணை​யம், பயணி​கள் தங்​கள் பயணப் பெட்டிகளின் கைப்​பிடி அல்​லது மேற்​பகு​தி​யில் வண்​ணமய​மான நாடாக்கள், ஸ்டிக்​கர்​கள் அல்​லது தனித்​துவ அடை​யாளங்​களை பொருத்​து​மாறு அறி​வுறுத்​தி​யுள்​ளது. - படம்: பிக்சாபே

சென்னை: ​வி​மான நிலை​யங்​களில் பயணப்பைகளை மாற்றி எடுத்​துச் செல்​லும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வ​தால், பயணப் பெட்டிகளில் பயணி​கள் வண்ண நாடாக்கள் கட்டுமாறு விமான நிலைய ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

சென்னை உள்​ளிட்ட நாட்​டின் பல்​வேறு விமான நிலை​யங்​களில், ‘கன்​வேயர் பெல்ட்​’களில் வரும் பயணப் பெட்டிகளைப் பயணி​கள் தவறு​தலாக மாற்றி எடுத்​துச் செல்​லும் சம்​பவங்​கள் தொடர்ச்​சி​யாக அதி​கரித்து வரு​கின்​றன.

ஒரே மாதிரி​யான வடிவம் மற்​றும் நிறங்​களில் பயணப் பெட்டி​கள் அதி​கம் பயன்​படுத்​தப்​படு​வ​தால் இந்தக் குழப்​பம் ஏற்​படு​வ​தாக கூறப்​படு​கிறது.

விமான நிறு​வனங்​கள், ஒவ்​வொரு பயணப் பெட்டிகளுக்கும் அடை​யாள ஒட்டுவில்லை வழங்​கி, அதற்​கான எண்ணைப் பயணி​களின் பயண அட்டையிலும் ஒட்​டு​கின்​றன.

இருந்​தா​லும், பயண களைப்பு, அவசரம் காரண​மாக பலர் ஒட்டுவில்லை எண்​களைச் சரி​பார்க்​காமல் உடைமை​களை எடுத்​துச் செல்​கின்​றனர். இதனால், பயணி​கள் இடையே வாக்​கு​வாதங்​களும் ஏற்​படு​கின்​றன.

இந்த பிரச்​சினைக்கு தீர்​வாக, இந்​திய விமான நிலைய ஆணை​யம், பயணி​கள் தங்​கள் பயணப் பெட்டிகளின் கைப்​பிடி அல்​லது மேற்​பகு​தி​யில் வண்​ணமய​மான நாடாக்கள், ஸ்டிக்​கர்​கள் அல்​லது தனித்​துவ அடை​யாளங்​களை பொருத்​து​மாறு அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதன்​மூலம், ‘கன்​வேயர் பெல்ட்​டில்’ வரும் உடைமை​களை எளி​தில் அடை​யாளம் காண முடி​யும் என அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதே​போல், சென்னை விமான நிலை​யத்​தில் ‘கன்​வேயர் பெல்ட்’​களை சுற்றி ‘டிராலிகள்’ உடன் மக்கள் கூட்​ட​மாக நிற்​பது என்​பது மற்​றொரு சிக்​கலாக உள்​ளது.

இதனால், சில பயணி​கள் தங்​கள் உடைமை​களை எடுக்க முடி​யாமல், அவை மீண்​டும் பெல்ட்டை சுற்றி வரக் காத்​திருக்க வேண்​டிய நிலை உரு​வாகிறது.

எனவே, வெளி​நாடு​களில் நடை​முறை​யில் உள்​ளது போல், பயணி​கள் ‘கன்​வேயர் பெல்ட்’​டிலிருந்து சிறிது தூரத்​தில் காத்​திருந்​து, தங்​கள் பெட்டிகள் வந்​த​பின் மட்​டும் முன்​னேறி சென்று எடுக்​கும் ஒழுங்​கு​முறையை சென்னை உள்​ளிட்ட வி​மான நிலை​யங்​களில் அமல்​படுத்த வேண்​டும் என பயணி​கள் கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

குறிப்புச் சொற்கள்
விமானத்துறைவிமானப் பயணம்விமானப் போக்குவரத்து