ஹைதராபாத்: தென்னிந்திய மாநிலங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலம், பல்லாரி பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இந்தப் பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகச் செய்தியில் குறிப்பபிடப்பட்டுள்ளது.
இதேபோல், தெலங்கானா மாநிலத்தில் 8 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துவிட்டன.
ஏற்கெனவே, ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் கடந்த மாதம் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் உயிரிழந்தன. ரத்தப் பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் மக்கள் மத்தியில் கவலையும் அச்சமும் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

