நகரத்தைவிட கிராமத்தில் இணையச் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வு

நகரத்தைவிட கிராமத்தில் இணையச் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வு

படம்: இந்திய ஊடகம்

22 Oct 2025 - 6:59 pm

1 mins read

மும்பை: இந்தியா முழுவதும் இருக்கும் நகரங்களைவிட கிராமங்களில் இணையச் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் இணையச்சேவை, திறன்பேசி அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, நகர்ப் புறங்களில் தற்போது 39.7 கோடி மக்களும் கிராமப் புறங்களில் 48 கோடி பேரும் இணையச் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த எண்ணிக்கை வரும் 2030ஆம் ஆண்டில், நகர்ப்புறங்களில் 54 கோடியாகவும் ஊரகப்பகுதிகளில் 70 கோடியாகவும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் இணையச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 88 கோடியாக இருந்த நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த ஆண்டுத் தரவுகளின் படி, இந்தியாவில் திறன்பேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 100 கோடிக்கும் அதிகமாக இருந்த நிலையில், 2030ஆம் ஆண்டில் 50 விழுக்காடு அதிகரித்து அந்த எண்ணிக்கை 150 கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இணையச் சேவையைப் பயன்படுத்துவோரில் ஆண்களின் எண்ணிக்கை 47 கோடியாகவும், பெண்களின் எண்ணிக்கை 41 கோடியாகவும் உள்ளது.

திறன்பேசிகளின் பயன்பாடே, மக்களிடையே இணையச் சேவை இந்த அளவுக்கு ஊடுருவக் காரணம் என, அந்த அமைப்பு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்