தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி வெற்றிபெறும்: சச்சின் பைலட்

1 mins read
8cd52c36-20fd-4b95-b0c0-3d533fa8ddc8
ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. சனிக்கிழமை (நவம்பர் 23) வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சில கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் எனத் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட்டில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சச்சின் பைலட் கூறுகையில் “மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை பொய்யாக்குவோம். மகா விகாஸ் அகாடி ஒன்றுபட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்ற ஓரிரு நாளில் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்.

“நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கூட்டு சேர்நது பா.ஜ.க.வுக்கு தூக்கமின்மையைக் கொடுப்பார்கள். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு கள உண்மையை வழங்கும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்