தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கங்களின் பாதுகாப்புக்கு ரூ.2,900 கோடி ஒதுக்கும் இந்தியா

1 mins read
16ef26ed-076e-44f7-8b65-b8451b4eaafa
குஜராத்தின் ஒன்பது மாவட்டங்களில் 674 சிங்கங்கள் வாழ்கின்றன. - கோப்புப் படம்: பிக்சாபே

காந்திநகர்: இந்தியாவின் மத்திய அரசாங்கம் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதற்காகக் கிட்டத்தட்ட ரூ.2,900 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதி சுற்றுச்சூழல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் பயன்படுத்தப்படும்.

குஜராத்தின் ஒன்பது மாவட்டங்களில் 674 சிங்கங்கள் வாழ்கின்றன. இந்தச் சூழலில், அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கங்களைப் பாதுகாப்பது, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிங்கங்கள் நீண்டகாலம் வாழ்வது உள்ளிட்ட அம்சங்களின் கீழ் இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்த அமைச்சு முடிவெடுத்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கு, கடந்த 2020ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 137 பேர் 2024ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டனர். அதிகாரிகள் வேகமாகச் செயல்பட 92 மீட்பு வாகனங்களும் வழங்கப்பட்டன.

இந்தியாவின் வனவாழ் பாதுகாப்பு பயணத்தில் இது ஒரு முக்கியத் திட்டமாக இருக்கும் என்றும் இது உலக அளவில் போற்றப்படும் திட்டமாக மாறும் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்