இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: 99% பேச்சுவார்த்தை நிறைவு

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: 99% பேச்சுவார்த்தை நிறைவு

1 mins read
f60f45e0-34f9-4eac-9b56-ab0c05824a8a
டெல்லியில் இந்தியா- அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்டப் பேச்சுவார்த்தை 99 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியா- அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்டப் பேச்சுவார்த்தை 99 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பாக, முதல்கட்டமாக ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

சிறிய அளவிலான சில விவாதங்கள் மட்டுமே பாக்கியுள்ளன. ஒப்பந்தம் இறுதியானவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.

இந்த முதல்கட்ட ஒப்பந்தம் முடிந்த கையோடு, இரண்டாம் கட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

தற்போது டெல்லியில் ஜூன் 4ஆம் தேதி வரை இந்த ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அமெரிக்கா தரப்பில் பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான வர்த்தகப் பிரதிநிதிகள் குழு பங்கேற்றுள்ளது.

இந்தியா தரப்பில் மத்திய வர்த்தகத் துறைச் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான சந்தை வாய்ப்புகள், வரியற்ற வர்த்தக நடைமுறைகள், சுங்கக் கட்டணம், முதலீடுகளை ஊக்குவிப்பது, பொருளியல் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
ஒப்பந்தம்அமெரிக்காஇந்தியாபேச்சுவார்த்தை