தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
குறைகடத்தித் துறையை மேம்படுத்த யோசனை

‘ஆய்வக வைரங்களிலிருந்து சில்லுத் தயாரிப்பில் இந்தியா, நெதர்லாந்து ஒத்துழைக்கலாம்’

1 mins read
c67781f7-da40-49dd-975d-647b8f5e60e6
குறைகடத்தி தயாரிப்பில் இந்தியாவும் நெதர்லாந்தும் ஒத்துழைப்பது குறித்து யோசனை. - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவும் நெதர்லாந்தும் ஆய்வக வைரங்களைக் குறைகடத்தி தயாரிப்பில் பயன்படுத்துவது குறித்த ஆய்வில் ஒத்துழைக்கலாம் என்று இந்திய மின்னியல், தகவல் தொடர்பு அமைச்சின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறியுள்ளார். 

நெதர்லாந்துடனான ஒத்துழைப்பு இந்தியாவின் குறைகடத்தித் துறையை மேலும் பலப்படுத்தும். குறைகடத்தி தயாரிக்கும் ஏஎஸ்எம்எல் போன்ற முக்கிய நிறுவனங்களைக் கொண்டுள்ள அந்நாடு, அத்துறையில் சில அம்சங்களில் ஏகபோகத்தைக் கொண்டுள்ளது என்றார் அவர்.

ஆய்வக வைரங்களின் பாரம்பரிய வணிகமானது நெதர்லாந்து, பெல்ஜியம், இந்தியாவின் சூரத் மாவட்டங்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தியுள்ளதை திரு எஸ்.கிருஷ்ணன் சுட்டினார்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மின்னியல்துறை உற்பத்தி பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளியல் ஆய்வு அறிக்கை, தொழில்துறையில் வடிவமைப்பு, உதிரிபாக உற்பத்தியில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்