தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாவது நாளாக துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியா, பாகிஸ்தான்

1 mins read
bd614822-6a13-4738-8909-558ff23a56da
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

ஸ்ரீநகர்: இந்தியா, பாகிஸ்தான் துருப்புகள் ஒன்று மற்றதன்மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை (ஏப்ரல் 26) துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளன.

கா‌ஷ்மீர் வட்டாரத்தில் சுற்றுப்பயணிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு கசந்தது.

பாகிஸ்தான் ராணுவச் சாவடிகளிலிருந்து வந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பதிலடியாகத்தான் தானும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டது. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் ஏப்ரல் 25 நள்ளிரவு வாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டன.

ஏப்ரல் 24ஆம் தேதி நள்ளிரவு வாக்கிலும் பாகிஸ்தான் துருப்புகள் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் சொன்னது. இந்தியத் தரப்பில் உயிருடற்சேதம் எதுவும் இல்லை.

பாகிஸ்தான் ராணுவம் கருத்துத் தெரிவிக்கவில்லை.

ஏப்ரல் 22ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கா‌ஷ்மீர் காவல்துறை சந்தேகத்திற்குரிய மூவரை அடையாளங்கண்டுள்ளது. அவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்.

தாக்குதலில் தாம் ஈடுபடவில்லை என்று பாகிஸ்தான் சொன்னது. அதன் தற்காப்பு அமைச்சர் தாக்குதல் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கா‌ஷ்மீர்த் தாக்குதலை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்று மற்றதன்மீது கடுமையான நடவடிக்கைகளை அறிவித்தன. இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் அதன் ஆகாயவெளியை மூடியது. இந்தியா, 1960ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது.

குறிப்புச் சொற்கள்