தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போக்குவரத்துத் துறையில் முதலீட்டாளர்களுக்கு இந்தியா மிகச் சிறந்த இடம்: மோடி

1 mins read
d5b4136b-6ea7-43ea-83de-d06ef0f884b6
‘இந்தியா வர்த்தக மையம்’ கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: பசுமைத் தொழில்நுட்பம், மின்வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள், உயிரி எரிபொருள் ஆகியவற்றின் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறையில் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்தியா ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில், ‘இந்தியா வர்த்தக மையம்’ என்ற கண்காட்சியை வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி ஜனவரி 17 முதல் 22ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.

எரிபொருள், சேமிப்புத்திறன், உதிரி பாகங்கள், மறுசுழற்சி, மின்னணுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியின் வலிமையானது, நாட்டின் வாகனத்துறையின் வளர்ச்சி வாய்ப்புகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்றார்.

அடுத்து பத்தாண்டுகளில் முடிவில் மின்சார வாகனங்களின் விற்பனை எட்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

“ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் ‘மேக் இன் இந்தியா’ முயற்சி பெரும் பங்காற்றி உள்ளது. இத்துறையில் 1.5 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

“பயணத்தை எளிதாக்குவதற்குத்தான் அரசு முன்னுரிமை அளிக்கிறது. கடந்த நிதிநிலை அறிக்கையில் உள்கட்டமைப்புக்காக ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. மேலும், நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டன.

“இந்தியாவின் வாகனத் தொழில்துறை அற்புதமானது. கடந்த ஆண்டு இந்தத்துறை 12% வளர்ச்சி கண்டுள்ளது. ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது,” என்றார் மோடி.

குறிப்புச் சொற்கள்