இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியா வழங்கும் 37 புதிய வீடுகள்

இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியா வழங்கும் 37 புதிய வீடுகள்

படம்: டிடிநியூஸ்

25 Nov 2026 - 7:01 pm

1 mins read

இந்தியாவின் வீடமைப்பு உதவித் திட்டத்தின்கீழ் இலங்கையில் இருக்கும் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு 37 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள கிரிவனகெட்டிய, கொபோவெல ஆகிய தோட்டங்களில் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கைப் பெருந்தோட்ட, சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்யாரத்ன, இந்தியத் தூதரக அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் 4,700 வீடுகளைக் கட்டும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்ட, இரண்டாம் நிலைப் பணிகளின் ஒரு பகுதியாக அக்கட்டுமானம் அமைகிறது.

நீண்டகாலமாக வீடமைப்புச் சவால்களை எதிர்நோக்கியுள்ள தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இலங்கையுடனான இந்தியாவின் மேம்பாட்டுப் பங்காளித்துவத்தில் வீடமைப்பு உதவி முக்கியப் பங்கு வகிக்கிறது.

குறிப்பாக, சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும் சிறந்த வாழ்க்கைச் சூழலுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதிலும் இது உதவுகிறது.

அடித்தள மட்டத்திலுள்ள சமூகங்களை மேம்பாட்டு உதவிகள் சென்றடைவதுடன், இந்தியா, இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் மக்கள் நலன் சார்ந்த பரிமாணத்தை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்