ஆறுபேரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது

1 mins read
8bcbade5-2509-425c-abb4-71352ddfc7c0
படம்: ஏஎஃப்பி -

கேரளாவில் நெல் சாகுபடியை நாசம் செய்தும், குறைந்தது ஆறுபேரைக் கொன்றதாக நம்பப்படும் காட்டு யானையை இந்திய வனத்துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரிக்கொம்பன் என்ற அந்த ஆண் யானையை கிட்டத்தட்ட 150 அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து சனிக்கிழமை (ஏப்ரல் 29) பிடித்தனர்.

5 மயக்க ஊசிகள் செலுத்திய பிறகுதான் யானையை அதிகாரிகளால் பிடிக்கமுடிந்தது.

யானையின் கால்கள் கட்டப்பட்டும் கண்கள் துணியால் மூடப்பட்டும், 4 நான்கு கும்கி யானைகளால் கனரக வாகனத்தில் ஏற்றப்பட்டது.

யானைக்கு 30 வயது இருக்கும் என்றும் அதன் கழுத்தில் ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரிக்கொம்பன் பல ஆண்டுகளாக பிடிபடாமல் அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து சென்றது. 2017ஆம் ஆண்டு மயக்க ஊசி செலுத்திய பிறகும் அடங்காமல் அது காட்டுக்குள் தப்பிச்சென்றது.

குறிப்புச் சொற்கள்