புதுடெல்லி: இவ்வாண்டு முதல் வரும் 2028ஆம் ஆண்டுவரையிலான காலத்துக்கு அனைத்துலக நிர்வாக அறிவியல் கழகத்தின் (ஐஐஏஎஸ்) தலைமைத்துவப் பொறுப்பை இந்தியா வகிக்கவுள்ளது.
பெல்ஜியத்தில் செயல்படும் அந்தக் கழகத்தின் கிட்டத்தட்ட 100 ஆண்டுகால வரலாற்றில் இந்தியா தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கவிருப்பது இதுவே முதல்முறை என்று என்டிடிவி ஊடகம் தெரிவித்தது.
ஐஐஏஎஸ் தலைமைத்துவப் பொறுப்புக்கான வாக்கெடுப்பில் இந்தியா வெற்றிபெற்றது. பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) அதற்கான வாக்கெடுப்பு நடந்தது.
இந்தியாவின் அரசியல் நிர்வாக சீர்திருத்த, பொதுமக்கள் குறைதீர்ப்புப் பிரிவின் (டிஏஆர்பிஜி) செயலாளரான வி. ஸ்ரீனிவாஸ், ஐஐஏஎஸ் கழகத்தின் தலைவராகப் பொறுப்பு வகிப்பார்.