புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கொரோனா அறிகுறிகளுடன் பலர் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது.
பல்வேறு மாநிலங்களிலும் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. மே 25, ஞாயிற்றுக்கிழமை வரை 257 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தற்போது மே 26ஆம் தேதி கணக்கின்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,007ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.